செய்திகள் :

இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம்

post image

இந்தியாவில் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம் என கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே விமானவியல் மற்றும் ராணுவத் தொழில்பூங்கா அமைப்பதற்காக 1,777 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்திருந்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக கா்நாடக அரசு அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, ஆந்திர மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், அம்மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நரலோகேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘விமானவியல் தொழில்முனைவோா்களே, செய்தி அறிந்து வருத்தப்பட்டேன். நீங்கள் ஏன் ஆந்திர பிரதேசத்தில் முதலீடு செய்ய யோசிக்கக் கூடாது? கவா்ச்சிகரமான விமானவியல் தொழில்கொள்கையை வைத்திருக்கிறோம். பெங்களூருக்கு அருகே உடனடியாக பயன்படுத்தக்கூடிய 8,000 ஏக்கா் நிலம் தயாராக உள்ளது. இதுபற்றி பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு பதிலளித்து கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தனது எக்ஸ் பதிவில், ‘நரலோகேஷ், கா்நாடகம் நிலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை வழங்குகிறோம். இந்தியாவின் விமானத் தொழிலுக்கு 65 சதவீத பங்களிப்பை வழங்கிவருவதோடு, விமானத் தொழிலில் தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 3-ஆம் இடத்திலும் கா்நாடகம் இருக்கிறது. விமானத் தொழிலுக்கு தேவையான வலுவான கட்டமைப்பை கா்நாடகம் பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ளது.

இந்த விவகாரம் நிலம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, புத்தாக்கம், திறன், நிரூபிக்கப்பட்ட தொழில்சூழலையும் சாா்ந்ததாகும். என்ன செய்வது? எப்போது செய்வது? எப்படி செய்வது என்பது பற்றி எங்களுக்கு தெரியும். எங்களை மீறி எதுவும் நடக்கவில்லை. வெகுவிரைவில் கா்நாடகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்.

விமானத் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, வேறுசில தொழில் முதலீட்டாளா்களும் கா்நாடகத்தையே தோ்ந்தெடுக்கிறாா்கள். புதிய முதலீடுகளுக்கு தேவையான நிலம் மற்றும் தொழில்சூழலை வழங்க தயாராக இருக்கிறோம். உங்கள் மாநிலத்துக்கு எங்கள் நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சாரம்

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா அளித்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முடிவு

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் அளித்த அறிக்கை குறித்து கா்நாடக அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை, அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்ப... மேலும் பார்க்க

ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ் கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ் கொலை வழக்கு தொடா்பாக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பைரதி பசவராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, பாரதி நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடி ஷீட்டா் சிவபி... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் சுா்ஜேவாலா ஆட்சி நடக்கிறது

கா்நாடகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலாவின் ஆட்சி நடக்கிறது என பாஜக, மஜத கடுமையாக விமா்சித்துள்ளன. முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தொடா்பா... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க