செய்திகள் :

இந்தியாவில் அறிமுகமான 'America First': இனி அமெரிக்கா விசா நேர்காணலுக்கு யாருக்கு முன்னுரிமை?

post image

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இந்திய பயணத்தில் இருக்கிறார்.

நேற்று இந்தியாவில், 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்கிற விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர்.

அமெரிக்கா ஃபர்ஸ்ட்‌ என்பது நவீன டிஜிட்டல் நடைமுறை ஆகும்.

அமெரிக்க விசாவிற்காக விண்ணப்பிப்பவர்களில் 'அமெரிக்காவில்' வணிகம் மற்றும் பிசினஸிற்காக விண்ணப்பிப்பவர்களை இந்த நடைமுறை முன்னிலைப்படுத்தும்.

அவர்களுக்கான விசா நேர்காணலையும் இந்த நடைமுறை விரைவுப்படுத்தும்.

இந்த நடைமுறை அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்கோ ரூபியோ
மார்கோ ரூபியோ
இந்த நடைமுறை குறித்து மார்கோ ரூபியோ கூறியுள்ளதாவது...

"இந்தியா - அமெரிக்கா பிசினஸ் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வணிக வல்லுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஒரு புதிய 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' விசா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

ஆனால், இந்த வசதி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அமெரிக்காவின் தேசிய நலனையும், தேசிய பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் முன்னணியில் நின்று உழைக்கும் அமெரிக்க தூதரகத்தின் ஊழியர்களுக்கும் இது முக்கியமானது.

இந்த புதிய வசதி நமக்கு அதிகப்படியான செலவுகளை மிச்சப்படுத்தியுள்ளது. ஏனெனில், இது நமது வேலைகளை இன்னும் திறம்பட செய்ய உதவும். நாம் எப்படியும் செய்ய வேண்டிய வேலைகளை, இன்னும் துல்லியமாகவும், வேகமாகவும், அதே சமயம் சுலபமாகவும் செய்து முடிக்க இது நமக்கு வழிவகுக்கும். அதனால் தான் இது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது".

கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் ரத்து... நிம்மதியில் கரும்பு விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக, கரும்பு விவசாயிகளைக் காவு கொடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் - 2026’, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஈரோடு: காலி மதுபாட்டில் விவகாரம், 3-வது நாளாக மூடப்பட்டுள்ள மதுபான கடைகள்!

காலி மதுபாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகள், வனவிலங்குகள், கால்நடைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், விளைநிலங்களும் ... மேலும் பார்க்க

வேளாண் கடன் தள்ளுபடி… முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ எனச் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்திருந்தது. விவசாய... மேலும் பார்க்க