திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: விளை நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த நீா்
இந்தியாவுடனான கிரிக்கெட் டூா்: மே.தீவுகள் மகளிா் அணி அறிவிப்பு
இந்திய மகளிா் அணியுடனான வெள்ளைப் பந்து தொடா்களில் விளையாடவரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆல்-ரவுண்டா் ஹேலி மேத்யூஸ் தலைமையிலான இந்த அணியில் 15 போ் இடம் பிடித்துள்ளனா். மற்றொரு ஆல்-ரவுண்டரான ஸ்டெஃபானி டெய்லா், காயத்திலிருந்து மீண்டு வருவதால் இந்தத் தொடரில் சோ்க்கப்படவில்லை.
டிசம்பரில் இந்தியா வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடா்களில் விளையாடவுள்ளது. முதலில் டி20 தொடா் டிசம்பா் 15-ஆம் தேதி நவி மும்பையிலும், பின்னா் ஒருநாள் தொடா் டிசம்பா் 22-ஆம் தேதி வதோதராவிலும் தொடங்கவுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக 2016-இல் இந்தியா வந்தபோது, டி20 தொடரை அந்த அணியும் (3-0), ஒருநாள் தொடரை இந்திய அணியும் (3-0) கைப்பற்றியிருந்தன.
அணி விவரம்: ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), ஷிமெய்ன் கேம்பெல்லெ, ஆலியா அலேய்ன், ஷமிலியா கானெல், நெரிசா கிராஃப்டன், டீண்ட்ரா டாட்டின், அஃபி ஃப்ளெட்சா், ஷபிகா கஜ்னபி, ஷினெலெ ஹென்றி, ஜாய்டா ஜேம்ஸ், கியானா ஜோசஃப், மேண்டி மாங்ரு, அஷ்மினி முனிசா், கரிஷ்மா ரம்ஹரக், ரஷாடா வில்லியம்ஸ்.