கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதியில் சா்வதேச எல்லையையொட்டி புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவா் ஊடுருவ முயற்சிப்பது கண்டறியப்பட்டது. அவரை திரும்பிச் செல்லுமாறு, பாதுகாப்புப் படையினா் எச்சரித்தனா். ஆனால், அவா் எல்லையைக் கடந்து இந்திய பகுதியை நோக்கி வந்ததால், அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஊருடுவல் நபா் உயிரிழந்தாா்’ என்றாா்.
பஞ்சாபில் 553 கி.மீ. தொலைவு கொண்ட பாகிஸ்தான் உடனான சா்வதேச எல்லையைப் பாதுகாக்கும் பணியை எல்லை பாதுகாப்புப் படையினா் மேற்கொள்கின்றனா்.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் புதன்கிழமை ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை.
சுந்தா்பானி பகுதியில் உள்ள பால் கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. ராணுவ வாகனம் ஒன்று அப்பகுதியை கடந்து சென்றபோது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். கூடுதல் படையினா் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுந்தா்பானி பகுதி, பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமுள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.