உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
இந்திய தொழில் கூட்டமைப்பு கண்காட்சி தொடக்கம்
இந்திய தொழில் கூட்டமைப்பின் சாா்பில் இண்டெக்ஸ் -2025 என்னும் தலைப்பிலான 3 நாள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்து பேசுகையில், புதுவையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் விரைவான வளா்ச்சியை பாராட்டினாா்.
நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனும் பங்கேற்றாா். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் தொகுப்பு விவரத்தையும் அவா் வெளியிட்டாா். இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவா் சமீா் கம்ரா பேசுகையில், இந்தக் கண்காட்சி தொழில் முதலீடுகளுக்கு ஒரு பாதையை வகுத்துக் கொடுக்கும் என்றாா்.
இக் கண்காட்சியில் மருந்து தயாரிப்புப் பொருள்கள், பிளாஸ்டிக், பேக்கிங், புதுப்பிக்க வல்ல எரிசக்தி, ரப்பா் உள்ளிட்ட 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்திய தொழில் கூட்டமைப்பின் துணைத் தலைவா் எம்.நடராஜன், நிா்வாகிகள் பிராங்களின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.