செய்திகள் :

'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

post image

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, 'இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம்!' என பேட் கம்மின்ஸ் பேசியதை போல லாராவும் பேசியது சுவாரஸ்யமான விஷயமாக இருந்தது.

Laura Wolvardt
Laura Wolvardt

லாரா பேசியதாவது, 'நாங்கள் நடந்து முடிந்த போட்டிகளையும் கடந்த காலத்தையும் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் அன்றைய நாளில் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறது என்றே நம்புகிறேன்.

எங்களின் எந்த வரலாற்றையும் இந்தப் போட்டிக்குள் திணிக்க விரும்பவில்லை. இந்த இறுதிப்போட்டியை ஒரு புதிய போட்டியாக புத்துணர்ச்சியோடு அணுகவே விரும்புகிறேன். இரு அணிகளின் மீதுமே பெரிய அழுத்தம் இருக்கிறது. எந்த அணியினர் அந்த அழுத்தத்தை நிதானமாக கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.' என்றார்.

India vs South Africa
India vs South Africa

தொடர்ந்து அவரிடம், 'பேட் கம்மின்ஸை போல உங்களுக்கும் இந்திய ரசிகர்களை அமைத்திப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?' என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, 'ஆம், நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். எங்களின் வெற்றி இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தும்!' என்றார்.

Ind v SA: ``அந்த ஒரு விஷயத்துலதான் கவனமா இருக்கோம்!'' - இறுதிப்போட்டி குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத்

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாடீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்ட... மேலும் பார்க்க

'அவளுக்கு கிரிக்கெட் செட் ஆகாது' - நிராகரிப்புகளை தகர்த்தெறிந்த ஜெமிமாவின் கதை! | Jemimah Rodrigues

எட்டு வயது சிறுமி அவள். வீட்டில் அத்தனை துறுதுறுப்பாக இருப்பாள். அண்ணன்கள் இருவரும் கிரிக்கெட் ஆடக்கூடியவர்கள். எனர்ஜியாக சுற்றித்திரியும் அந்த சிறுமியையும் கிரிக்கெட் ஆட அனுப்பி வைக்கலாம் என பெற்றோர்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்! - 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வென்ற இளம்பரிதி!

நேற்று சென்னையை சேர்ந்த இளம்பரிதி ஏ.ஆர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபனில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுபவர்களில் இவர் ... மேலும் பார்க்க

'என்னாலயே நம்ப முடியல...' - ஆஸியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்!

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியா... மேலும் பார்க்க

Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த கண்ணீருடன் ஜெமிமா!

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. சவால் நிறைந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா சிறப்பாக ஆடி சதமடித... மேலும் பார்க்க