107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
இந்த வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது: தேவேந்திர ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது என்றும், இது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியதாவது:
”மக்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றி மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்ளனர் என்பதை காட்டுகிறது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்களா?
நான் ஒரு நவீன அபிமன்யு என்றும், சக்கர வியூகத்தை எப்படி தகர்ப்பதென்று எனக்கு தெரியுமென்று முன்பே நான் கூறியிருந்தேன். இந்த வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது, இது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றியென்று நான் நினைக்கிறேன்.
மக்கள் தங்கள் உத்தரவை வழங்கியுள்ளனர். உண்மையான சிவசேனையாக ஏக்நாத் ஷிண்டேவை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
முதல்வர் யார் என்பதில் எங்களுக்குள் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை, இது குறித்து 3 கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுக்கப்படும். இந்த முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்று பேசினார்.