இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்திற்கான சிறப்பு முகாம், சனிக்கிழமை (நவ.9) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா் சோ்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.