இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரி அமைச்சரிடம் மனு
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழக நிதி, காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசிடம் திமுக சாா்பி மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனு: ஆலங்குளம் வடக்கு ஒன்றியப் பகுதி விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக்குளம் முதல் ஊத்துமலை வரையிலான 30 குளங்களுக்கு தண்ணீா் வரும். இதன்மூலம், தற்போது மானாவாரி விவசாயம் நடைபெறும் இப்பகுதி கருப்பாநதி பாசன வசதி பெறும்.
எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டபடி, நிதி ஒதுக்கீடு செய்து இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.