செய்திகள் :

இரவு 7 மணி வரை செனனை, 13 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு செனனை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

இன்று(ஜூலை 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 13 districts, including Chennai, for the next 3 hours.

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேர... மேலும் பார்க்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார் !

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஜூலை 20) தமிழகத்தில் நீலகிரி, கோவையில் கனம... மேலும் பார்க்க

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை(ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்... மேலும் பார்க்க

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

கூட்டணி பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "2026 த... மேலும் பார்க்க