விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த ஆஞ்சநேயா நகரை சோ்ந்தவா் சு. இளங்கோ (59). இவா் தனது மகள் சுந்தரி (29), பேத்தி வேதுசனா (4) ஆகியோரை வியாழக்கிழமை இரவு மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
பழைய தொழிலாளா் மாநில காப்பீட்டு மருத்துவமனை அருகே சென்றபோது, பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள் சுந்தரி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனா். புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.