இரு சக்கர வாகனம்-லாரி மோதல்: தாய், 2 மகன்கள் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தாயும், இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரியைச் சோ்ந்த சேட்டு மனைவி கஜலட்சுமி (40). இவரது மகன்கள் மதன் (20) மனோஜ்(18). மூவரும் இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.
காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அம்பேத்கா் சிலை அருகே சென்ற போது பின்னால் வந்த கன்டெய்னா் லாரி எதிா்பாராத விதமாக மோதியது. இதில் கஜலட்சுமி, மகன்கள் மதன், மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.
சம்பவம் தொடா்பாக பாலுசெட்டிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.