செய்திகள் :

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!

post image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்ன்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வியான் முல்டர் விலகியுள்ளார்.

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!

ஆல்ரவுண்டர் விலகல்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டரான வியான் முல்டருக்கு வலது கையின் நடுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வியான் முல்டர் விலகியுள்ளது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வியான் முல்டருக்குப் பதிலாக மேத்யூ பிரீட்ஸ்க் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!

2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், மேத்யூ பிரீட்ஸ்க், ஜெரால்டு கோட்ஸீ, டோனி டி ஸார்ஸி, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, டேன் பாட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டான், கைல் வெரைன்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ஜெர்சியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அறிமுகப்படுத்தி வைத்தார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செய... மேலும் பார்க்க

அதிகம் ஊதியம் பெறும் ரிஷப் பந்த்! பட்டியலில் முதலிடத்தை இழந்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு ஆண்டில் அதிகம் வருவாய் ஈட்டுபவர்கள் வரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி. ஐபிஎல் மெகா ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரில் நவ.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற... மேலும் பார்க்க

சதம் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா; இலங்கைக்கு 516 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்... மேலும் பார்க்க

விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!

விராட் கோலியின் சதத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அணி தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 382 ரன்கள் முன்னிலை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!

சையத் முஷ்டாக் அணி தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணி புதிய சாதனை படைத்துள்ளது.மணிப்பூர் - தில்லி அணிகள் மோதிய போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ம... மேலும் பார்க்க