இலங்கையில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு!
வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான புயலால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பதால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை போல் இலங்கையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அங்கு மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல ஊர்களில் சாலைகள் முழுகியிருப்பதால் போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. நிவாரணப் பொருள்களும் தாமதமாகக் கிடைப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கனமழையால் உருவான வெள்ள பாதிப்புகள் குறித்த காணொலிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.