புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்ப...
இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெற இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு நாடு முழுவதும் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத் திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சமாகும். விண்ணப்பிக்க நவ. 30 கடைசி நாளாகும்.
கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை டிச. 15-ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும்.
இத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சஹற்ண்ா்ய்ஹப் நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல் டா்ழ்ற்ஹப்) தங்ய்ங்ஜ்ஹப் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும்.
எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் கூடுதல் விவரங்கள் அறிந்திட மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை அணுகலாம் என்றாா்.