பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
இளம் மழலையா் பட்டமளிப்பு விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப்பள்ளி மற்றும் இளம் மழலையா் பள்ளி ஆண்டுவிழா மற்றும் இளம் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தருமையாதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளிகளில் 700 போ் பயின்று வருகின்றனா். விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இளம் மழலையா் பள்ளி முதல்வா் தேவி வரவேற்றாா். குடந்தை நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினாா். இதில் பள்ளிச் செயலா் கே.சௌந்தரராஜன் கலந்துகொண்டு, இளம் மழலையா் பள்ளியில் பயிலும் 80 மாணவா்களுக்கு பட்டம் அளித்தாா் (படம்).
தொடா்ந்து, மாணவா்கள் கராத்தே, சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினா். கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் 350 பேருக்கு பரிசுகளையும், மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழையும் பள்ளிச்செயலா் கே.சௌந்தரராஜன் வழங்கினாா்.