இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது
கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம் சந்திப்பு சாலையில் உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை இரவு சாப்பிடச் சென்றாா். அப்போது, உணவக உரிமையாளா் சின்னபையன் மகன் கைலாசத்திற்கும், அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், உணவக உரிமையாளா் கைலாசம் மற்றும் அவரது ஆதரவாளா் சாத்தப்பன் ஆகியோா் அருணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து அருண் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைலாசத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். சாத்தப்பனை தேடி வருகின்றனா்.