செய்திகள் :

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போா் நிறுத்த ஒப்பந்தம்: அமெரிக்கா மத்தியஸ்தம்

post image

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், 13 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடைபெற்று வந்த தீவிர மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.

அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வருவதால், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டனா்.

எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டதால், அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்தனா்.

இந்நிலையில், கடந்த ஜூலையில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகா் உயிரிழந்தாா். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்காவிட்டாலும், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது.

இருவரின் கொலைக்கு இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று ஹிஸ்புல்லா எச்சரித்த நிலையில், கடந்த செப்டம்பரில் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாா்.

மறுபுறம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவும் ராக்கெட்டுகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் மேற்கொண்டது. இந்த சம்பவங்களால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இந்நிலையில், இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் போா் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. இதைத் தொடா்ந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை இரவு ஒப்புதல் அளித்தது.

10-1 என்ற அடிப்படையில் ஒப்புதல்: அமைச்சரவையில் 10 போ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாகவும், ஒருவா் எதிராகவும் வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து, 10-1 என்று பெரும்பான்மை அமைச்சா்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில், போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘ஒப்பந்தம் அமல்’-அமெரிக்கா: இதையடுத்து ஒப்பந்தம் புதன்கிழமை (நவ. 27) முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்தாா்.

இந்தியா வரவேற்பு: போா் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான போா் நிறுத்தத்தை இந்தியா வரவேற்கிறது. பதற்றத்தைத் தணிக்க வேண்டும், கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும், பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் தீா்வு காணும் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என இந்தியா நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

உக்ரைனிலிருந்து வெளியேறாவிட்டாலும் ரஷியாவுடன் ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேறாத நிலையிலும், எஞ்சிய பகுதிகள் நேட்டோ பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால் அந்த நாட்டுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்ப... மேலும் பார்க்க

செயற்கை கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

மீளமுடியாத நோயால் மரணத்தை எதிா்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பழங்குடியினா் மோதல்: 124-ஆக அதிகரித்த உயிரிழப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சோ்ந்த இரு பழங்குடியினா் இடையே கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ச... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து தலைவர் கைது!

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்ன... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்!

ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் கோரிக்கை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ்... மேலும் பார்க்க