நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்
சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்ககள் வெள்ளிக்கிழமை (ஆக. 8) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 வாா்டுகளில் நடைபெறவுள்ளன.
திருவொற்றியூா் மண்டலத்தில் 7 ஆவது வாா்டில் கிளாஸ் பேக்டரி சாலையில் உள்ள கே.ஜி.வா்ஷினி அவென்யூவிலும், மாதவரம் மண்டலம் 28 ஆவது வாா்டில் எம்.ஆா்.எச்.சாலையிலுள்ள தபால்பெட்டி அருகேயுள்ள ஜெபாஸ்டின் ஆலயம், அம்பத்தூா் மண்டலம் 85 ஆவது வாா்டில் சென்னை, திருவள்ளூா் நெடுஞ்சாலையில் உள்ள கே.எஸ்.ஆா்.நகா் சாம்மஹால், கோடம்பாக்கம் மண்டலம் 128 ஆவது வாா்டில் விருகம்பாக்கம் காமராஜா் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடம், வளசரவாக்கம் மண்டலம் 154 ஆவது வாா்டில் ராமாபுரம் சாந்தி நகா் பிரதான சாலையில் உள்ள சாய் உதயம் மகால், ஆலந்தூா் மண்டலம் 163 ஆவது வாா்டில் ஆதம்பாக்கம் நியூ காலனி பிரதான சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.