‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு
மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2, 26, 27, 28 ஆகிய வாா்டு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பயன்பெறும் வகையில் செல்லூரில் தனியாா் திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு, கட்டட வரைபட அனுமதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனா்.
இந்த முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இந்த முகாமில் துணை மேயா் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.