செய்திகள் :

உங்க `லவ் பிளே' மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265

post image

'லவ் பிளே' எப்படியெல்லாம் இருந்தால், தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இங்கே விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

1. நோ பதற்றம்

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

எக்காலத்திலும் பதற்றமாக செக்ஸ் செய்யாதீர்கள். இதனால், விந்து சீக்கிரமாக வெளி வந்துவிடும். இதனால், ஆண் ஆர்கசம் அடைந்தாலும், மனைவியால் அடைய முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.

2. ஆழ்ந்து மூச்செடுங்கள்

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

தொடர்ந்து உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் இருக்கிறதென்றால், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் மெடிட்டேஷன் செய்யுங்கள். இவை உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து, ஆர்கசம் கிடைக்க உதவி செய்யும் என கண்டறிந்திருக்கிறார்கள்.

3. ஆரோக்கியம் ஆர்கசத்துக்கு முக்கியம்

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

நல்ல செக்ஸ் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். அதே நேரம், உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்ல செக்ஸும், ஆர்கசமும் கிடைக்கும். தவிர, உடல்பருமன் பிரச்னை இருந்தாலும், உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும்.

4. உடல் மீதான தாழ்வு மனப்பான்மை வேண்டாம்

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

தன் உடல் மீது தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தன் உடலில் குறை இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும்.

5. கிண்டல் வேண்டாம்

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர், உடல் உறுப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யவே கூடாது. வாயளவில் இதை அவர்கள் சிரித்து கடந்தாலும், மனதளவில் காயப்பட்டு விடுவார்கள். உறவின்போது இந்தக் கிண்டல்கள் நினைவுக்கு வந்துவிட்டால், முழுமனதாக உறவில் ஈடுபடவே மாட்டார்கள்.

6. கூச்சப்படாதீர்கள்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

தாம்பத்திய உறவில் கூச்சமே கொள்ளாதீர்கள். முன்விளையாட்டுகள், ரொமாண்டிக்காக பேசுதல், உறவின்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை துணையிடம் சொல்வது, உறவுக்கு ஏற்றபடி டிரெஸ் செய்வது என செக்ஸை அழகாக்குவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

7. நிதானம் பிடிக்கும்

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

நிதானமாக உறவுகொள்வது பெண்களுக்குப் பிடிக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல கிடுகிடுவென முடித்துவிட்டு தூங்கி விடாதீர்கள். இந்த பாயிண்ட் ஆண்களுக்கானது.

8. ஒரே மாதிரி... வேண்டவே வேண்டாம்

தினமுமோ அல்லது அடிக்கடியோ ஒரே மாதிரி பொசிஷனில் ஈடுபடாதீர்கள். தொடர்ந்து ஒரே அறையிலும் உறவு கொள்ளாதீர்கள். பொசிஷனையும் அறைகளையும் மாற்றுங்கள்.

இவற்றையெல்லாம் பின்பற்றினால், கணவன் மனைவிக்குள்ளேயே செக்ஸில் த்ரில் கொண்டு வர முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264

கணவனும் மனைவியும் உறவுகொள்கையில் பேச வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். பேசுவதால் என்ன பலன் என்றோம். தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா...குழப்பமான மனநிலையில இருக்கி... மேலும் பார்க்க

இதற்காகவெல்லாம் உங்கள் தாம்பத்திய இன்பத்தை இழக்காதீர்கள்! | காமத்துக்கு மரியாதை -263

''மிகவும் சின்ன விஷயமாக இருக்கும். ஆனால், மனம் விட்டுப் பேசாததால் கணவன் - மனைவிக்கு இடையே அது மிகப்பெரிய பிரச்னையாக மாறி நிற்கும். அப்படியொரு பிரச்னையுடன் தான் அந்த தம்பதியினர் என்னை சந்திக்க வந்திருந... மேலும் பார்க்க

சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262

குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும்இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்... மேலும் பார்க்க