உதகையில் கனமழை
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை கனமழை பெய்தது.
உதகை பேருந்து நிலையம், பிங்கா் போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பணி முடிந்து வீடு திரும்பியவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்தனா்.