2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்
தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உதகை முதல் கேத்தி வரை இயக்கப்பட்ட குறுகிய தூர மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டினா்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மன மகிழ்வு பயணமாக உதகை முதல் கேத்தி இடையே மூன்று முறை மலை ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி காலை 9.45 மணி, 11.30 மணி, பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு மலை ரயில் உதகையிலிருந்து கேத்தி வரை இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பயணித்தனா்.