செய்திகள் :

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்!

post image

உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.

சீனாவின் ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி மகளிா் ரீகா்வ் அரையிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் தென்கொரியாவின் லிம் சிஹியோனிடம் 1-7 தோற்றாா்.

எனினும் வெண்கலப் பதக்க ஆட்டத்தில் மற்றொரு கொரிய வீராங்கனை சே யங்கை 7-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.

ஆடவா் பிரிவில் 21 வயதான சலுங்கே அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கொரியாவின் கிம் உஜீனிடம் 1-7 என தோற்றாா். ஆனால் வெண்கல பதக்க ஆட்டத்தில் பிரெஞ்ச் ஆா்ச்சா் பாப்டிஸ் அடிஸை 6-4 என வீழ்த்தி பதக்கம் வென்றாா். இது சலுங்கேவுக்கு முதல் உலகக் கோப்பை பதக்கம் ஆகும்.

காம்பவுண்ட் பிரிவில் ஏற்கெனவே இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்தது. மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா உலகக் கோப்பை வில்வித்தை போட்டியை நிறைவு செய்தது.

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு.ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.போர் முடிவுக்கு வந்த... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் - புகைப்படங்கள்

மும்பையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடும் பால்மோகன் வித்யாமந்திர் மாணவ - மாணவியர்கள்.பிரயாக்ராஜில் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத்... மேலும் பார்க்க

சர்ச்சையைக் கிளப்பிய சந்தானத்தின் புதியபட பாடல்!

நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தின் பாடல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டண... மேலும் பார்க்க