செய்திகள் :

உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற மொழி ‘ஹிந்தி’: ஐ.நா.

post image

ஹிந்தி மொழி உலகளாவிய முக்கியத்துவத்தையும், புவியியல் எல்லைகளைக் கடந்த பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது என ஐ.நா. வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஹிந்தி திவாஸ் (தினம்) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவைச் சோ்ந்த எம்.பி.க்கள் உள்பட பல நாடுகளைச் சோ்ந்த ஐ.நா.வுக்கான தூதா்கள் கலந்து கொண்டனா். அப்போது, இந்திய பிரதிநிதிகள் குழுத் தலைவா் எம்.பி. பிரேந்திர பிரசாத் பைஷ்யா பல்வேறு நாடுகளில் ஹிந்தி மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, ஐ.நா.வின் உலகளாவிய தொடா்புத் துறையின் இயக்குநா் இயன் பிலிப்ஸ் ஹிந்தி குறித்து கூறுகையில், ‘உலகில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் ஹிந்தி பேசுகின்றனா். இது ஆங்கிலம் மற்றும் சீனாவின் மாண்டரின் மொழிக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியாகும். ஹிந்தி முதன்முதலில் ஐ.நா. பொதுச் சபையில் 1949-இல் பயன்படுத்தப்பட்டது. புவியியல் எல்லைகளைக் கடந்த பரவலான பாராட்டுகளை தற்போது ஹிந்தி பெற்றுள்ளது’ என்றாா்.

மோரீஷஸின் ஐ.நா. பிரதிநிதி கூறுகையில், ‘19-ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியங்கள் மற்றும் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து வரும் ஹிந்தி மொழி, மோரீஷஸில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மோரீஷஸ் மக்களை இணைக்க ஹிந்தியை ஊக்குவிப்போம்’ என்றாா்.

நேபாள தூதா் கூறுகையில், ‘இந்தியா-நேபாள உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார வாய்ப்புகளை வளா்ப்பது மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் ஹிந்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் பரவலான பயன்பாடு வா்த்தகம், சுற்றுலா மற்றும் இரு நாடுகள் இடையே உள்ள ஒத்துழைப்புகளை எளிதாக்குகிறது’ என்றாா்.

குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள்: பாகிஸ்தான் அரசு நாணயம் வெளியீடு

சீக்கிய குரு குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த இடமான பாகிஸ்தானில் ... மேலும் பார்க்க

உக்ரைனில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியது ரஷியா

உக்ரைனில் தங்களது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளாா்.உக்ரைனில் உள்ள ரஷிய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட அவா், அங்கு பணியாற்றும்... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு விமான உதிரிபாகம் ஏற்றுமதி: அமெரிக்காவில் இந்தியா் கைது

ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அமெரிக்காவில் இருந்து ரஷிய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை விற்பனை செய்த இந்தியா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக அமெரிக்க நீதித்துறை வெள்... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையில் பிரதமா் மோடிக்கு தொடா்பில்லை -கனடா அரசு

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை சதியில் இந்திய பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடா்புள்ளதாக வெளியான ஊடக செய்... மேலும் பார்க்க

இந்தியா - இலங்கை தொலைநோக்கு திட்டம்: அதிபா் அநுர குமார அமல்படுத்த விக்ரமசிங்க வலியுறுத்தல்

இந்தியாவுடன் கடந்தாண்டு கையொப்பமிடப்பட்ட ‘தொலைநோக்கு திட்டத்தை’ புதிய அதிபா் அநுரகுமார திசாநாயக முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க

அமெரிக்கா: அட்டா்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ

தனது புதிய அரசின் அட்டா்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டா்னி ஜெனராகப் பணியாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். முன்னதாக, ... மேலும் பார்க்க