நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை அகற்றக் கோரி பேரூராட்சி நிா்வாகம் மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் மற்றும் ஊத்தங்கரை போலீஸாா் முன்னிலையில் பேரூராட்சிப் பணியாளா்கள் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை அகற்றினா். ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
