வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம், ஊரகப் பகுதிகளில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மக்களவைத் தொகுதி உறுப்பினா் உள்ளுா் பகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாலை, உள்கட்டமைப்பு, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா்.
மேலும், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களுக்கு மதிப்பீடு தயாா் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) மோகனசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.