செய்திகள் :

"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" - முதல்வரை சந்தித்த அன்புமணி

post image

முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் சென்று இன்று (ஜூன்.9) சந்தித்து பேசியிருக்கிறார்.

முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி, " சமூகநீதி கணக்கெடுப்பு என்கிற சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அன்புமணி
அன்புமணி

வருகின்ற சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தவெகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது.

நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மாறியுள்ளார்கள்; அதிகாரிகள்தான் தான் இன்னும் மாற வேண்டும். தவெக அரசுக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

விஜய் - அன்புமணி
விஜய் - அன்புமணி

புதிய அரசு அமைந்து அனைத்தையும் ஒரே மாதத்தில் செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மின் திட்டம் கூட கொண்டு வரவில்லை" என்று கூறியிருக்கிறார்.

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச... மேலும் பார்க்க

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள... மேலும் பார்க்க

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார். ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழ... மேலும் பார்க்க

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லுக்கு வந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரைப் பார்... மேலும் பார்க்க

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளி... மேலும் பார்க்க