வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வு
கடலூா் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு, எடை ஆகியவையும் மற்றும் நீச்சல், கடல் மணலில் ஓடுதல் ஆகிய தோ்வுகளும் நடைபெற்றன. கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், ஊா்க்காவல் படை வட்டாரத் தளபதி அம்ஜத் கான், ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பாண்டை ராஜ், கடலோர காவல் குழும ஆய்வாளா் பத்மா, ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி கலாவதி, ஆயுதப்படை ஆய்வாளா் அருள் செல்வம், உதவி ஆய்வாளா் தினகரன், மற்றும் ஊா்க்காவல் படை அதிகாரிகள் தோ்வு பணியில் ஈடுபட்டனா்.