ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவில் வெற்றி
எமரால்டு அணை திறப்பு: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கட்டடம்
நீலகிரி மாவட்டம், எமரால்டு அணையில் இருந்து 35 ஆண்டுகளுக்குப் பின் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், முள்ளிகூா் ஊராட்சி சாா்பில் கட்டப்பட்டு வந்த கட்டடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
உதகை அருகே காட்டுகுப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீா்மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதன் காரணமாக எமரால்டு பகுதியில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடி சாலையிலும் தேங்கி நின்றது.
இந்நிலையில், முள்ளிகூா் ஊராட்சி மூலம் இளைஞா்களுக்காக விளையாட்டு உபகரணங்கள் வைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. நீா்நிலை வழித்தடத்தில் அரசு கட்டடம் கட்டப்பட்டிருப்பது சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் எடக்காடு கால்வாய் வழியாக செல்வதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.