செய்திகள் :

எம்.ஜி.ஆர் கொடுத்த பிளாங்க் செக்; ஜெயலலிதாவின் பிரச்சார திட்டமிடல்! - யார் இந்த செங்கோட்டையன்?

post image

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்" என்றார்.  

ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன்
ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன்

இந்நிலையில் ஏற்கனவே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய செங்கோட்டையனை, நேற்று(அக்.31)அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

யார் இந்த செங்கோட்டையன்?

1971 வரை திமுக-வில் இருந்த செங்கோட்டையன், 1972-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் ஆன அதிமுக-வில் இணைந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய மாவட்டதிற்கு உட்பட்ட தொகுதிகளில் கட்சி ரீதியிலான செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈர்த்து நற்பெயரைப் பெற்றிருக்கிறார்.

1975-ல் கோவை மாவட்டத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றிருக்கிறது. அந்தப் பொதுக்குழு கூட்டத்திற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன்  பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கம்

அந்தக் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக முடித்ததற்காக செங்கோட்டையனுக்கு எம்.ஜி.ஆர் ஒரு பிளாங்க் செக்கை  விழா மேடையிலேயே கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை செங்கோட்டையன் வாங்க மறுத்திருக்கிறார். இப்படி அதிமுக-வின் தீவிர தொண்டனாக இருந்திருக்கிறார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் - எம்.ஜி.ஆர்

அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து 1977-ல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார். தொடர்ந்து 1980ல் கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகிறார்.

9 முறை எம்.எல்.ஏ

1980-ல் இருந்து தற்போது வரை அதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இடையில் 1996ல் மட்டும் தோல்வியை தழுவினார். மேலும் 2001 தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 9 முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். தற்போதைய எம்.எல்.ஏவும் இவர் தான்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனை போன்று அதிக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் இருக்கிறார், தமிழக அரசியல் களத்தில். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா பொதுச்செயலாளராக பதவியேற்றப் பிறகு ஜெயலலிதாவிற்கும் ஒரு அபிமான நபராகத்தான் செங்கோட்டையன் திகழ்ந்திருக்கிறார். 

ஜெயலலிதாவின் பிரசார திட்டமிடலை வகுப்பவர்

எம்.ஜி.ஆர் உடன் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வது, ஜெயலலிதாவின் பிரசார திட்டமிடலை வகுப்பது என கட்சி தலைமைக்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே பல உயரங்களை செங்கோட்டையன் எட்டினார். போக்குவரத்து (1991–1996) விவசாயம் (மே 2011–நவம்பர் 2011) தகவல் தொழில்நுட்பம் (நவம்பர் 2011–ஜனவரி 2012) வருவாய் (ஜனவரி 2012–ஜூலை 2012) பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் & விளையாட்டு (டிசம்பர் 2016–மே 2021) போன்ற துறைகளில் அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்.

செங்கோட்டையன் - ஜெயலலிதா
செங்கோட்டையன் - ஜெயலலிதா

அதுமட்டுமின்றி கட்சியில் முடிவெடுக்கும் சில பொறுப்புகளைக்கூட செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். இப்படி எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நெருக்கமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர். 2014-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேரிடும்பொழுது அப்போது செங்கோட்டையனின் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அதிகமாக அடிபட்டிருக்கிறது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. ஓபிஎஸ் தான் முதல்வர் ஆனார்.

கட்சியில் சீனியர்...

அதன்பின் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுற்றப்போது சசிகலா தலைமையில் கூவத்தூரில் ஆலோசனை நடைபெற்றபோதுகூட கட்சியில் சீனியர்... பலமுறை தேர்தலில் வெற்றிப்பெற்றவர், அரசியல் அனுபவம் கொண்டவர் அவருக்குத்தான் முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது எடப்பாடி பழனிசாமிக்குத்தான். கொங்கு பெல்ட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்கொடியை தூக்கியிருக்கிறார். 

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கி தற்போது ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்திருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து இன்று காலை 11 மணிக்கு பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார். எடப்பாடி உட்பட அதிமுக-வின் முக்கிய தலைகள் அத்தனை பேரின் கவனமும் செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார் என்பதிலேயே இருக்கும். அதிமுக-வின் சூப்பர் சீனியர், என்ன பேசப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சக வரலாற்றுத்துறை பேராசரியரான வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவ... மேலும் பார்க்க

SIR: "பாதகமான வாக்குகளை நீக்குகிறார்கள்" - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் செயல்படுத்தவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது திமுக அரசு.இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந... மேலும் பார்க்க

முதல்வர் பதவி வாய்ப்பை யாராவது விடுவார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள்

"எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் செங்கோட்டையன் என்ற ஒரு தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று அ... மேலும் பார்க்க

UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

* அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!* "பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம். * ``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' -... மேலும் பார்க்க