செய்திகள் :

``எம்.பி-க்களுக்கு மட்டும் அலுவலகம் இல்லை; தமிழக அரசு மறுக்க காரணம் என்ன?'' - சு.வெங்கடேசன் கேள்வி

post image

விசிக எம்.பி ரவிக்குமார், "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும்.

மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

 VCK எம்.பி ரவிக்குமார்
VCK எம்.பி ரவிக்குமார்

அந்த வரிசையில் இதே கோரிக்கையை முன்வைத்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், இந்த கோரிக்கையை மறுக்க தமிழக அரசுக்கு இருக்கும் நியாயமான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இது குறித்து தனது முகநூல் பதிவில் சு. வெங்கடேசன், "தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற அரசின் சார்பில் அலுவலகம் கட்டித்தரப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுந்தான் அலுவலகம் வழங்கப்படவில்லை.

இது சம்பந்தமாக மாநில அரசின் கவனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கொண்டு சென்றாகிவிட்டது. மாநில வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்கள் இப்பிரச்சனையை எழுப்பினார்.

உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு அலுவலங்களைப் பெறுவதற்கு அந்தந்த மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் தயவில் தான் வாடகை கட்டிடம் பெற வேண்டிய நிலையில் எம்.பி-க்கள் உள்ளனர்.

எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் பணிகளை நிறைவேற்ற அலுவலகம் தாருங்கள் என்று கேட்கிறோம்.

கேரளா உள்ளிட்ட அருகாமை மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டியும் கேட்டாகிவிட்டது.

17-வது நாடாளுமன்றம் முடிவடைந்து 18-வது நாடாளுமன்றத்தின் ஓராண்டும் முடிவடைந்து விட்டது.

இந்த கோரிக்கையை மறுக்க தமிழக அரசுக்கு இருக்கும் நியாயமான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Gingee Fort: செஞ்சிக் கோட்டைக்கு கிடைந்த யுனெஸ்கோ அங்கிகாரம்; பின் தொடரும் சலசலப்பு! - என்ன காரணம்?

யுனெஸ்கோ உலக பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 - 25-ம் ஆண்டு பரிந்துரையாக 'Maratha Military Landscapes' என்ற பெயரில் 12 கோட்டைககளை இந்திய அரசின் கலாசார அமைச்சகம் பரிந்துரைத்து அனுப்பியது. அத... மேலும் பார்க்க

TVK: `முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!' - பனையூரின் `மாநாடு' மூவ்; எடப்பாடிக்கு செக்?

'முக்கிய மெசேஜ்!'தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்று திடீரென பனையூரிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பறந்திருக்கிறது... மேலும் பார்க்க

``ஸ்டாலின் துரோகி; வன்னியர்களின் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு கிடையாது'' - கொந்தளிக்கும் அன்புமணி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் போராட்டம் நடந்திருந்தது. அதில், திமுக அரசுக்கு எதிராக அன்புமணி கடுமையாக கொந்தளித்திருக்கிறார். அன்புமணி ராம... மேலும் பார்க்க

``வருங்கால துணை முதல்வரே..'' - உசுப்பேத்திய நிர்வாகி; பதறிப்போன நயினார்!

அணியில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நிர்வாகி ஒருவர் 'வருங்கால துணை முதல்வரே...' என அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நயினார் நாக... மேலும் பார்க்க

MODI -க்காக RSS -ஐ பகைத்துக்கொள்ளும் BJP ? | MK STALIN ADMK TVK VIJAY | Imperfect Show 19.7.2025

* போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி. * வரதட்சணை வழக்கு - கணவர் பூபாலன் கைது!* என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது காவல் துறைக்கே தெரியும் ... மேலும் பார்க்க

``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `கறார்' மெசேஜ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் பேசிய எடப்பாடி கூட்டணி ஆட்சிக்கெல... மேலும் பார்க்க