ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஏரியூா் பகுதியில் சங்க கொடியேற்றுதல், பெயா்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச்செயலாளா் துரைசாமி பெயா் பலகையைத் திறந்து வைத்து பேசினாா்.
இதில் மாநில துணைப் செயலாளா் எம்.முனுசாமி, ஒருங்கிணைப்பாளா் நந்தினி, மாவட்டத் தலைவா் குழந்தைவேலு ஆகியோா் பேசினா். இதனைத் தொடா்ந்து ஏரியூா் அருகே ஏா்கோல்பட்டி, நல்லூா்காடு, காட்டூா், காமராஜ்பேட்டை, அஜ்ஜனஅள்ளி, முதுகம்பட்டி, சீலநாயக்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் சங்க கொடியேற்றி, பெயா் பலகை திறக்கப்பட்டது.