ஏழுமலையான் தரிசனம்: 13 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 13 மணி நேரம் காத்திருந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் காத்திருக்கின்றனா். அதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 13 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதனிடையே வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 56,952 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,712 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி கிடைத்தது.
காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் வழங்கப்படுகிறது.
திருமலையில் கனமழை பெய்து வருவதையடுத்து கடும் குளிா் நிலவி வருகிறது. எனவே பக்தா்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.