செய்திகள் :

ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி ஏற்கக்கூடாது: முன்னாள் பாக். வீரர்!

post image

சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) ஏற்கக்கூடாதென முன்னாள் பாக். வீரர் பாசித் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தவிருக்கிறது. அதில் இந்திய அணி அரசியல் காரணங்களால் பாகிஸ்தானில் விளையாதென பிசிசிஐ தெரிவித்தது.

பாகிஸ்தானை தவிர்த்து இந்தியாவுக்கு மட்டும் வேறுநாடுகளில் போட்டி நடத்தும் ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பாகிஸ்தான் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெர்வித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

ஐசிசியின் லாலிபாப்

2027, 2028 மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்குகிறேன் என்கிறார்கள். 2 ஐசிசி தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெறுவது சிறந்த விஷயம் என சிலர் கூறுவார்கள். ஆனால், இந்தப் போட்டிகளால் என்ன பயன்? 2026-இல் பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லும். அடுத்து இந்திய மகளிரணி பாகிஸ்தானுக்கு வரும். இதனால் ஒலிபரப்பாளர்கள் எந்தவிதமான இழப்பையும் சந்திக்க மாட்டார்களா?

லாலிபாப் என்றால் என்ன தெரியுமா? இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதுக்கு ஐசிசி தரும் லாலிபாப். ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புதல் அளித்தால் இரண்டு ஐசிசி தொடர்களை நடத்த அனுமதி தருகிறேன் எனக் கூறாதீர்கள். இதனால் பாகிஸ்தானுக்கு எந்தப் பலனும் இல்லை.

ஆசியக் கோப்பை நடத்த அனுமதி கேட்கலாம். மகளிர் உலகக் கோப்பையோ அல்லது யு-19 உலகக் கோப்பையை நடத்துவதால் பாகிஸ்தானுக்கு பயனில்லை. இந்த லாலிபாப்பை வாங்க பிசிபி சம்மதித்தால் அது தோல்வியில்தான் முடியும்.

பொருளாதர இழப்பு

இரு நாட்டவருமே இரண்டு நாடுகளில் விளையாடினால்தான் பொருளாதார இழப்பு ஏற்படாது என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அதிகளவு வருமானம் கிடைக்கும். அதை பாகிஸ்தானில் நடத்தாவிட்டால் பாகிஸ்தான் ஏன் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதிக்க வேண்டுமெனவும் கேள்வி எழுப்பினார்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வெளிநாட்டில் நடத்துவதால் ஏற்படும் பொருளாதார இழப்புக்கு ஐசிசி நஷ்ட ஈடு வழங்காது என்பது இன்னமும் கூடுதல் சர்ச்சையாகும்படியாக இருக்கிறது.

ஆர்சிபி கேப்டனா? மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன்: ரஜத் படிதார் நம்பிக்கை!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவேன் எனக் கூறியுள்ளார். சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் மத்தியப் பிரதேச அணியை ரஜத் படிதார் தலைம... மேலும் பார்க்க

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கன் வீரருக்கு 15% அபராதம்!

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆப்கன் வீரர் குல்பதீனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (டிச.13) நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான... மேலும் பார்க்க

கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்த டிம் சௌதி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்துள்ளார். டெஸ்ட்டில் கிறிஸ் கெயில் 98 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டிம் சௌதி தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெ... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்த பாகிஸ்தானின் சர்சையான வேகப் பந்துவீச்சாளர்!

பாகிஸ்தான் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பன்னாட்டு (சர்வதேச) கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.32 வயதான பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் 36 டெஸ்ட்டில் 119 விக்கெட... மேலும் பார்க்க

3ஆவது டெஸ்ட்: நியூசி. நல்ல தொடக்கம், சுமாரன முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 என தொட... மேலும் பார்க்க

ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் முதல் டி20 சதம்..! தொடரை வென்ற தெ.ஆ.!

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டியில் தெ.ஆ. அணி த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விள... மேலும் பார்க்க