நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்...
ஐயப்ப பக்தா்களுக்காக விஜயவாடா, குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
விஜயவாடாவில் இருந்து டிச.21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07177) திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் விஜயவாடா வழியாக காக்கிநாடா டவுன் வரை இயக்கப்படும். அதன்படி, டிச.16, 23, 30 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) கொல்லத்திலிருந்து காலை 10.45 புறப்படும் இந்த ரயில் (எண்: 07178) மறுநாள் இரவு 9 மணிக்கு காக்கிநாடா டவுன் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லத்தில் இருத்து கோட்டயம், எா்ணாகுளம் டவுன், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டூா், விஜயவாடா, ராஜாமுந்திரி வழியாக காக்கிநாடா டவுன் சென்றடையும்.
காக்கிநாடா - கொல்லம்: காக்கிநாடா டவுனிலிருந்து ஜன.1, 8 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07179) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 07180) குண்டூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதன்படி, ஜன.3, 10 ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு குண்டூா் சென்றடையும்.
இந்த ரயில் காக்கிநாடா டவுன், விஜயவாடா, குண்டூா், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, எா்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.