செய்திகள் :

ஐயாறப்பர் ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றம்!

post image

ஐயாறப்பர் ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐய்யாறப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்குச் சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்குச் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் கொடி மங்கள வாத்யங்கள் இசையுடன் மூலவர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள். இதனை தொடர்ந்து. கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி. இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால். தயிர். சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள். சிவகணங்கள் இசைக்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடி ஏற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வருகின்ற 27ம் தேதி நடைபெறுகிறது.

விழாவின் ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

The Aadipura festival began with a grand ceremony at the Aiyarappar Temple with the hoisting of the flag.

ஃபிடே மகளிா் செஸ் உலகக் கோப்பை: காலிறுதியில் வைஷாலி, ஹரிகா

ஃபிடே மகளிா் செஸ் உலகக் கோப்பை போட்டி காலிறுதிக்கு இந்தியாவின் வைஷாலி, ஹரிகா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா். ஏற்கெனவே ஹம்பி, திவ்யா ஆகியோா் தகுதி பெற்ற நிலையில் முதன்முறையாக 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெ... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ரயில்வே-கடற்படை அணிகள்

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு ரயில்வே-இந்திய கடற்படை அணிகள் தகுதி பெற்றுள்ளன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை அரையிறுத... மேலும் பார்க்க

பராசக்தி வெளியீட்டில் மாற்றம்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் நட... மேலும் பார்க்க

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் முதல் போஸ்டர்!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே... மேலும் பார்க்க