விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் மொத்தம் 30,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை மாலை 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 28,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்த நிலையில், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்துள்ள தருமபுரி மாவட்ட நிா்வாகம், பரிசல்கள் இயக்குவதற்கு மட்டும் அனுமதித்துள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்தால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.