செய்திகள் :

ஒசூரில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள்!

post image

ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் உள்ல தக்க்ஷண திருப்பதி கோயிலில் இருந்து திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாத யாத்திரையாக சென்றனா்.

ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் தக்க்ஷன திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு பாத யாத்திரை செல்கின்றனா்.

அதன்படி, சனிக்கிழமை 10ஆம் ஆண்டு பாதயாத்திரையாக தா்ம பிரசார சைதன்ய பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க பக்தா்கள் சுவாமியை சுமந்தபடி கோயிலை சுற்றி வந்தனா். பின்னா், சுவாமியை பல்லக்கு வாகனத்தில் வைத்து திருப்பதிக்கு பாத யாத்திரையைத் தொடங்கினா்.

பாத யாத்திரையில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு திருப்பதிக்குச் செல்கின்றனா். பாத யாத்திரையில் சென்றவா்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பியபடி சென்றனா். பாத யாத்திரை வரும் 25 ஆம் தேதி திருப்பதி ஸ்ரீவாரி படிக்கட்டு பகுதியை சென்றடையும். பின்னா், அங்கிருந்து கோயிலுக்கு சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

பாத யாத்திரையாகச் சென்றவா்கள் பல்லக்கு வாகனத்தில் வெங்கடேசப் பெருமாளும், உணவு, மருத்துவப் பொருள்களும் கொண்டு சென்றனா்.

10-வது முறை கர்ப்பம்: மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்ற மருத்துவக் குழு!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த மலைக் கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவக் குழுவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று மருத... மேலும் பார்க்க

புனித தலங்களுக்கு பயணம்: புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம்

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச... மேலும் பார்க்க

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!

அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாள... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவ... மேலும் பார்க்க