ஒட்டன்சத்திரத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
ஒட்டன்சத்திரம் வனத்துறை, கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வனத்துறை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம்- பாச்சலூா் சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதியில் வீசப்பட்டிருந்த நெகிழிப் பைகள், குப்பைகளை கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், வனத் துறையினா் அகற்றினா். இதில் வனச்சரக அலுவலா் ராஜா, வனவா் சின்னத்துரை, பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மாரிமுத்து, மாணவா்கள் கலந்து கொண்டனா்.