107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம்: அகிலேஷ் யாதவ்
ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தேர்தலை ஊழலுக்கு இணையாக ஆக்கியவர்களின் தந்திரங்களை புகைப்படங்களாக எடுத்து, உலகிற்கு காட்டும் நேரம் வந்துவிட்டது. உண்மையான போராட்டம் தொடங்கிவிட்டது. ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: என்ன நடக்கிறது ஜார்க்கண்டில்.. மாறி மாறி முந்தும் கூட்டணிகள்!
உத்தரப் பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 2 தொகுதிகளில் சமாஜவாதி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் - சமாஜவாதி கூட்டணி அமைந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.