செய்திகள் :

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

post image

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார்.

கிராம மக்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஹிமாசலப் பிரதேசம் சிர்மெளர் மாவட்டத்திற்குட்பட்ட ஷில்லாய் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்கள், தங்களின் பாரம்பரிய முறைப்படி ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணப்பெண் சுனிதா செளஹான் மற்றும் மணமகன்கள் பிரதீப் - கபீல் நேகி ஆகிய மூவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இதில் எந்தவித அழுத்தங்களையும் தாங்கள் சந்திக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஹிமாசலப் பிரதேசம் - உத்தரகண்ட் மாநில எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்கள் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர்.

இந்த சமூகத்தில் ஒரு பெண், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம். பல நூற்றாண்டுகளாக இந்த மரபு இவர்களிடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஜோடித்ரா என இவர்கள் அழைக்கின்றனர்.

எனினும், கல்வியறிவு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்றவை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த மக்களிடையே ஒரே பெண், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பழக்கும் குறைந்து வருகிறது.

இதுபோன்ற திருமணங்கள் அப்பகுதிகளில் புனிதமானதாகவும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் உள்ளது.

தற்போது பாந்தனா கிராமத்தில் சுனிதா செளஹான் என்ற மணப்பெண், பிரதீப் - கபீல் நேகி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு ஆண்களைத் திருமனம் செய்துள்ளார். அப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளில் நடக்கும் 5வது திருமணம் இதுவாகும்.

திருமணம் பெருமையானது

மணமகன் பிரதீப் அரசுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவரின் சகோதரர் கபீல் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

இது குறித்து மணமகன்களில் ஒருவரான பிரதீப் கூறுகையில், ''நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறோம். இதனால் நாங்கள் பெருமை அடைகிறோம். இது எங்களின் கூட்டு முடிவு. யாருடைய அழுத்தமும் இதில் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

கபீல் நேகி கூறுகையில், ''நான் வெளிநாட்டில் வேலைபார்ப்பவனாக இருக்கலாம். ஆனால், குடும்பத்துக்கு என்னுடைய ஆதரவை நான் உறுதி செய்வேன். ஒரே குடும்பமாக இருந்து எங்கள் மனைவிக்கு நிலையான அன்பை நாங்கள் வழங்குவோம். வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை நாங்கள் நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தின் நிலம் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் ஹட்டி பழங்குடி சமூகத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சிர்மெளர் மாவட்டத்தில் உள்ள 450 கிராமங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த ஜோடித்ரா வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

இதையும் படிக்க |விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

2 Himachal Brothers Marry Same Woman Embracing Polyandry

சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்ட ஒடிஸா சிறுமி: தில்லி எய்ம்ஸுக்கு மாற்றம்!

ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவ... மேலும் பார்க்க

ரூ.3,500 கோடி ஊழல்: குற்றப் பத்திரிகையில் ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன் சோ்ப்பு

ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயா் குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, ஆந்திரத்தில் ம... மேலும் பார்க்க

24 கோடி இந்தியா்கள் வறுமையிலிருந்து மீண்டனா்: நீதி ஆயோக்

பத்து ஆண்டுகளில் 24 கோடி இந்தியா்கள் வறுமையிலிருந்து மீண்டதாக நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி தெரிவித்தாா். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் அண்மையில் நடத்திய நிகழ்ச்சி ... மேலும் பார்க்க

ராஜிநாமாவை திரும்பப் பெற்றாா் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளாா். பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, அன்மோலை ஞாயிற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதத்துக்கும் தயாா்: மத்திய அரசு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூா் உள்பட எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: வீரா்களுக்கு தேநீா் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்!

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரா்களுக்கு தண்ணீா், பால், தேநீா் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க