செய்திகள் :

ஒலிம்பிக் வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல்!

post image

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.

பையத்லட்டுகள் பலர் அளித்த குற்றச்சாட்டை விசாரிக்க, அமெரிக்க பையத்லான் (U.S. Biathlon) உறுப்பினர்களுக்கு அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் (USOPC) மின்னஞ்சல் அனுப்பியது. மின்னஞ்சல் செய்தியில், பயிற்சியாளர் ஒருவர் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், புகார் அளித்த வீரர்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பயிற்சியாளரின் பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. விசாரணை நடக்கும்போது கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று யுஎஸ்ஓபிசி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த நிலையில், பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தனது 15 ஆவது வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கேரி மீது கேரி குற்றம் சாட்டியுள்ளார். கிரேஸ், தனது 18 ஆவது வயதில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்தபோதும், அவருக்கு கேரி மிரட்டல் விடுத்துள்ளார். தனது பையத்லான் கனவு பாழாகி விடும் என்ற அச்சத்துடனேயே கிரேஸ் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிரேஸ் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதை அறிந்த மருத்துவர், கிரேஸுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்துமாறு கேரியிடம் கூறியுள்ளார். இருப்பினும், மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கிரேஸ், 2010 ஆம் ஆண்டு, அக்டோபரில் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்த சக விளையாட்டு வீரரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிரேஸ் காப்பாற்றப்பட்டார்.

அடுத்த நாளிலேயே, கேரி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில், நோர்டிக் பனிச்சறுக்கு உயர் செயல்திறன் இணை இயக்குநராக அமெரிக்க பாராலிம்பிக் அணியால் பணியமர்த்தப்பட்டார். பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ஒலிம்பிக் வீரர் ஜோன் ரெய்ட் சில மாதங்களுக்கு புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பல விளையாட்டு வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இதையும் படிக்க:லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரே ஆண்டில் சில கோடிகள் கிடைத்திருக்கும்..!

காஸா உயிரிழப்பு 44,835-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44,835-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:நுசீரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பே... மேலும் பார்க்க

பிரிட்டன்: சாலை விபத்தில் இந்திய மாணவா் உயிரிழப்பு

லண்டன்: பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டா் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து லெய்செஸ்டா் நகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

வங்கதேசத்தவா் 78 பேரை திருப்பி அனுப்ப ஒடிஸா காவல் துறை முடிவு

புவனேசுவரம்: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 78 வங்கதேசத்தினரை அவா்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஒடிஸா காவல்துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

விடுதலைப் போர் முழக்கம் இனி தேசிய கோஷமல்ல: வங்கதேச அரசு

டாக்கா: வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம் இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அந்தப் போராட்ட... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீா்மானம்

சியோல்: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோலுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் மீண்டும் பதவிநீக்கத் தீா்மானம் தாக்கல் செய்துள்ளன. இது குறித்து நாடாளுமன்ற அ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 1,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வ... மேலும் பார்க்க