ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!
34 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த 2017இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு நுழையாமல் வெளியே செல்கிறது.
ஃபகார் ஸமான் டி20 உலகக் கோப்பையில் இருந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை. கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2023 உலகக் கோப்பையில் விளையாடினார்.
தற்போது பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதால் அவர் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ளார் ஃபகார் ஸமான்.
ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்
வங்கதேசத்துடன் போட்டியில் காயம் ஏற்பட்டு பேட்டிங்கில் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது பாகிஸ்தான்.
ஓய்வு குறித்து ஃபகார் ஸமான் அவர் பேசியதாவது: :
நானும் இந்த ஓய்வு குறித்த வதந்திகளை கேள்விப்பட்டேன். எனது நண்பர்களும் இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினார்கள். ஒருநாள் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்தமானது. எனக்கு தைராய்டு இருப்பதால் கம்பேக் கொடுப்பதில் தாமதம் ஆகிறது. ஆனால், எனக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் கூட விளையாட நினைக்கிறேன்.
நான் எப்போது திரும்பி வருவேன் என்பது மட்டுமே கேள்வி. இன்னும் 3 வாரங்களில் நான் பயிற்சி செய்யலாம் என மருத்துவர் கூறியுள்ளார். அதனால், நான் மீண்டும் ஒரு மாதத்திற்குள் கிரிக்கெட் விளையாட தொடங்குவேன் என்றார்.