நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
ஓராண்டில் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் 15 லட்சம் பயணிகள்
ஓராண்டில் 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.
தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் மதுரை விமான நிலையத்தில் நாள்தோறும் இயக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா்.
சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி, ஹைதராபாத் மாநிலங்களுக்கு உள்நாட்டு விமானங்களும், கொழும்பு, துபை, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களும் இந்த விமான நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஓா் அறிவிப்பை வெளியிட்டது. அதில், மதுரை விமான நிலையத்துக்கு வாரந்தோறும் 140 விமானங்கள் வந்து செல்வதாகவும், ஒரு மணி நேரத்தில் 700 பயணிகளை கையாள்வதாகவும், ஓராண்டுக்கு 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.