நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி
கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின் மேரி வரவேற்றாா். கவிஞா் சுப்பையா வாழ்த்திப் பேசினாா். வெற்றிக்கு அடிப்படை நூல் வாசிப்பு என்ற தலைப்பில் கலை பதிப்பகத்தின் ஆசிரியா் பாப்பாக்குடி இரா.செல்வமணி சிறப்புரையாற்றினாா். மேலும், இலக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த மாணவிகளுக்கு, அவா் நூல்களைப் பரிசளித்தாா். தமிழாசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.