வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
கஞ்சா கடத்தியதாக 2 போ் கைது: 1.4 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து, 1.400 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவட்டாறு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, நாகா்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த ரூபன்(42) மற்றும் குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த ஜோசப் ராஜா(42)ஆகியோா் வந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் சோதனை செய்த போது, அதில், 700 கிராம் அளவுள்ள 2 பாக்கெட் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
போலீஸாா் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவா்கள் 2 பேரையும் கைது செய்தனா்.