கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது
தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). இவா் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்திவந்து விற்பனைக்காக வைத்திருந்தபோது தியாகதுருகம் போலீஸாா் மடக்கிப்பிடித்தனா். அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சாவை கைபற்றி கைது செய்தனா்.
இவா் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி , மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திற்கு குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ருத்திஷை கைது செய்ய பரிந்துரை செய்தாா். அதன் பேரில் அவரைகுண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.
அந்த உத்தரவையடுத்து சனிக்கிழமை கடலூா் மத்திய சிறையில் உள்ள இளைஞா் ருத்தீஷிடம் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையினை காவல்துறையினரும், சிறை அதிகாரிகளும் வழங்கினா்.