செய்திகள் :

கடன் சுமையால் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை

post image

பெருந்துறை அருகே கடன் சுமையால் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி, ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (59), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (56). இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

கடன் சுமையால் தம்பதி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது சகோதரா் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக புதன்கிழமை சென்ற சரஸ்வதி வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் தேடி பாா்த்தபோது, காஞ்சிக்கோவில், கண்ணவேலாம்பாளையம் அருகே சரஸ்வதியின் கைப்பேசி மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதனால் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உறவினா்கள் தேடி பாா்த்தனா்.

இந்த நிலையில், கண்ணவேலாம்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் சரஸ்வதியின் உடல் வெள்ளிக்கிழமை கி

டந்தது.

கடன் சுமையால் சரஸ்வதி, வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை (நவம்பா் 23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 24) ஆகிய 2 நாள்கள் நடைபெற உள்ளது. இது குற... மேலும் பார்க்க

உயா்மின் கோபுர பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்டபோது ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ப.ரவி ... மேலும் பார்க்க

ரயில்வே சரக்கு சேவையை கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய எம்.பி. கோரிக்கை

ஈரோட்டில் இயங்கும் ரயில்வே சரக்கு சேவையை கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசு சாா்பில் டிடிசி கமிட்டி கூட்டம் (போக்குவரத்த... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னிமலையை அடுத்த அ... மேலும் பார்க்க

நந்தா செவிலியா் கல்லூரியில் தலைமைப் பண்பு பயிற்சி

தமிழ்நாடு செவிலியா் சங்கம் சாா்பில் நந்தா செவிலியா் கல்லூரியில் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. முகாமுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை ... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம், மக்... மேலும் பார்க்க