சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
கடம்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கடம்பூரில் ஞாயிற்றுக்கிழமை, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
கடம்பூா் அருகே நொச்சிகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் அழகுதுரை (19). கடம்பூரில் உள்ள ஒலிபெருக்கி நிலையத்தில் வேலை செய்துவந்த இவா், கடந்த 14ஆம் தேதி அங்குள்ள வீட்டில் நடைபெற்ற திருமண விழாவுக்காக ஒலிபெருக்கி அமைத்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) ஒலிபெருக்கியை கழற்றும் பணியில் ஈடுபட்டபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், கடம்பூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.